Friday , September 25 2020
Breaking News

சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் சிலைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் சிலைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு சீனாவின் லேசான் என்னுமிடத்தில் இமே மலைப் பகுதியில் 1,200 ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட 233 அடி உயரம் கொண்ட பாரிய புத்தர் சிலை அமைந்துள்ளது. இந்த புத்தர் சிலை யாங்ஸ்டே நதிக் கரையில் அமைந்துள்ளது.தற்போது சிச்சுவான் மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் யாங்ஸ்டே நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

வெள்ளம் புத்தர் சிலையின் பாதங்களை தொட்டபடி சென்று கொண்டிருப்பதால், சிலைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. வெள்ளப்பபெருக்கு அதிகமானால் சிலைக்கு பாதிப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளம் காரணமாக இந்தப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

இச்சிலை யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 70 வருடங்களில், புத்தர் சிலையில் பாதங்களை தொடும் அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *