Tuesday , September 29 2020
Breaking News

அவுஸ்ரேலியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் – பிரதமர் ஸ்கொட் மொறிசன்

அவுஸ்ரேலியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலையுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடித்துள்ள அஸ்ட்ராஜெனக்கா நிறுவனத்துடன் அவுஸ்ரேலிய அரசு ஒரு உடன்பாட்டைச் செய்துள்ளது. தடுப்பு மருந்து பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்தவுடன், அதை உள்நாட்டில் தயாரித்து அவுஸ்ரேலியாவில் உள்ள 2.5 கோடி மக்களுக்கும் இலவசமாக போடப்படும் என பிரதமர் ஸ்கொட் மொறிசன் பிபிசி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவில் இதுவரை 23,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 493 பேர் இதுவரையில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *