Friday , September 25 2020
Breaking News

நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தடுப்பு பணிகளில் மேலும் 500 இராணுவத்தினர்

நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், தடுப்பு பணிகளில், மேலும் 500 இராணுவத்தினர் ஈடுபடுத்தபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நியூசிலாந்தில் 102 நாட்களாக கொரோனா பாதிப்பு யாருக்கும் ஏற்படாமல் இருந்தது. கடந்த 11ம் திகதி முதல் ஆக்லாண்ட் நகரில் மீண்டும் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த நகரின் எல்லைப் பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்படும் முகாம்களில் 1200 படை வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியது.

புதிதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் நியூசிலாந்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தங்கியுள்ள ஹோட்டல்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் கடல் எல்லைப் பகுதி மற்றும் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

பிரதமர் ஜாசிண்டா ஆர்டன் ஆக்லாண்ட் நகரில் 2 வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும் அந்நாட்டின் தொற்று நோயியில் நிபுணர்கள், கொரோனாவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர். எதிர்க்கட்சி தலைவரும் , தேசிய கட்சியின் தலைவருமான ஜூடித் கோலின்ஸ் நியூசிலாந்து நாட்டின் கொரோனா தடுப்பு நடவடிக்கை தோல்வியடைந்து விட்டதாக கருத்து தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் இரண்டாம் அலைவீச்சில் இதுவரை 96 பேர் புதிதாக கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *