Saturday , September 26 2020
Breaking News

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீர்ர்கள் எவருக்கும் இடமளிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட் பெரும்பாலான நாட்கள் மழையினால் பாதிக்கப்பட்டதால், சமநிலையில் முடிந்துள்ளது.

3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை ஆரம்பமாகவுள்ளது. இதற்குப் பின்னர், வரும் 28-ந்திகதி மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடும் யாருக்கும் இடம் அளிக்கப்படவில்லை.

பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து அணியில் 1. இயன் மோர்கன் , 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. ரொம் பாண்டன், 5. சாம் பில்லிங்ஸ், 6. ரொம் கர்ரன், 7. ஜோ டென்லி, 8. லீவிஸ் கிரேகோரி, 9. கிறிஸ் ஜோர்டான், 10. சாஹிப் மெஹ்மூத், 11. தாவித் மலன், 12. அடில் ரஷித், 13. ஜேசன் ராய், 14. டேவிட் வில்லே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜோ ரூட், ஜாஃப்ரா ஆர்சர், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஜோஸ் பட்லர் ஆகியோருக்கு இதில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *