Monday , September 28 2020
Breaking News

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற ஆசனத்துக்குப் போட்டியிடுவற்கு அனுமதிக்கும் வகையிலா 20 ஆவது அரசியலமைப்பு ??

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற ஆசனத்துக்குப் போட்டியிடுவதை தடை செய்யும், 19 ஆவது திருத்தச் சட்டப் பிரிவுகள், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம், முற்றாக நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 20 ஆவது அரசியலமைப்பு திருத்த யோசனைகள் குறித்து அரச தரப்பு கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. அடுத்த மாத நடுப்பகுதியில் இந்த யோசனைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற ஆசனத்துக்குப் போட்டியிடுவற்கு அனுமதிக்கும் வகையில், புதிய திருத்தத்தில் யோசனை முன்வைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கமைய, இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற ஆசனத்துக்குப் போட்டியிடுவதை தடை செய்யும், 19 ஆவது திருத்தச் சட்டத்தின், பிரிவுகள் அனைத்தையும் நீக்குவது குறித்தும், கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்து இன்னமும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *