Tuesday , September 29 2020
Breaking News

கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று தெகிவளையில் உள்ள சிறிய விடுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக தனியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்

கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று, தெகிவளையில் உள்ள சிறிய விடுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக தனியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேற்று சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 2019 ஏப்ரல் 21ஆம் திகதி காலை 8.45 மணியளவில், நட்சத்திர விடுதிகளிலும், தேவாலயங்களிலும் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன. உடனடியாக கொழும்பு நகரம் முடக்கப்பட்டது. எனினும், தாஜ் சமுத்ரா விடுதியில் முதல் இலக்காக தெரிவு செய்திருந்த அப்துல் லதீப் முகமட் ஜமீல், அங்கு வெடிக்க வைக்க முடியாமல் போன நிலையில், கார் ஒன்றில், தெகிவளையில் உள்ள சிறிய விடுதி ஒன்றுக்குச் சென்று குண்டை வெடிக்க வைத்திருந்தார்.

அவர் குண்டை வெடிக்க்க வைத்தாரா, அல்லது முன்னர் வெடிக்கத் தவறிய குண்டை பரிசோதித்த போது அது வெடித்த்தா என்ற சந்தேகங்கள் உள்ளன. இந்த விடயத்தில் தெளிவற்ற நிலைமைகள் காணப்படுவதால், முழு தாக்குதல்களையும் குறித்து விசாரிப்பதற்கு அப்பால், இந்தச் சம்பவம் குறித்து தனியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், போர் முடிந்த பின்னர், நல்லாட்சி அரசாங்கம், அமைதி, நல்லிணக்கம், அதிகாரம் ஆகிவற்றில் மாத்திரம் கவனம் செலுத்தியது என்றும், மக்களின் பாதுகாப்பில் குறைவாகவே கவனம் செலுத்தியது என்றும் நிலந்த ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *