Wednesday , September 30 2020
Breaking News

19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள், 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் இல்லாமல் ஒழிக்கப்படக் கூடாது – ஜேவிபி

19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள், 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் இல்லாமல் ஒழிக்கப்படக் கூடாது என்று ஜேவிபி வலியுறுத்தியுள்ளது. ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத், நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 19 ஆவது திருத்தச்சட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாக ஏற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹெரத், எனினும், சுயதீன ஆணைக்குழுக்களை ஒழிப்பதற்கு அரசாங்கம் நடிவ்க்கை எடுக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

ஜனநாயகம் மற்றும் நீதி என்பனவற்றை நிலைநாட்டுவதில் தேர்கள் ஆணைக்குழு முக்கிய பங்கு வகித்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல்கள் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்தப்படுவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *