Tuesday , September 29 2020
Breaking News

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் வெட்டுக்காக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் வெட்டுக்காக, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். கடந்த திங்கட்கிழமை மதியம் கெரவலப்பிட்டிய உப மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறினால், நாட்டின் அனைத்து மின்விநியோக மார்க்கங்களிலும் மின்சாரத் தடை ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் பல மணிநெரம் மின்சாரம் தடைப்பட்டது. சுமார் 8 மணிநேரம் கழித்தே, நாடு முழுவதுக்குமான மின் விநியோகம் சீரடைந்தது.

இந்த நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட திடீர் மின்தடைக்காக மன்னிப்புக் கோரியுள்ளார். இதனால் நாட்டுக்கு பெருமளவு பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். தாம் பதவியேற்று 96 மணி நேரங்களுக்குள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *