Saturday , September 26 2020
Breaking News

வல்லை வெளிப் பகுதியில் இடம் பெற்ற வெடிப்பு சம்பவம்

யாழ்ப்பாணம், வல்லை வெளிப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்
ஒன்றில், இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வல்லைச் சந்தியில் உள்ள இராணுவ முகாமைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் இராணுவச்
சிப்பாய்கள் இருவரும் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரால் தவறவிடப்பட்ட பொதியை அவதானித்த இராணுவ அதிகாரி, அதனைப் பிரிக்க முற்பட்டபோது, வெடிப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் இராணுவ அதிகாரி, காயமடைந்துள்ளார் என்று நெல்லியடி நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *