Friday , September 25 2020
Breaking News

வேட்பாளர்களுக்கு தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பிரசாரப் பணிகளை முன்னெடுப்பதற்காக, வேட்பாளர்களுக்கு தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்துள்ளது. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
வேட்பாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடலில் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் உள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் நேற்று மாலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியினால் யாழ்ப்பாண மாவட்டத்தில், நிறுத்தப்பட்டுள்ள 7 வேட்பாளர்களும், புளொட் அமைப்பினால் நிறுத்தப்பட்டுள்ள இரு வேட்பளர்களும், ரெலோ சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு வேட்பாளருமாக, 10 வேட்பாளர்களும், கலந்துகொண்டனர்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும் அதற்கான பிரசாரங்களை மேற்கொள்வது தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது, அத்டன், தொகுதி ரீதியாக தேர்தலைக் கையாளுவதற்கு, ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும், தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி மாவை சேனாதிராசா, தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், காங்கேசன்துறைத் தொகுதியைக் கையாளுவதற்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்.ஏ சுமந்திரனுக்கு, பருத்தித்துறைத் தொகுதியும், வேதநாயகம் தபேந்திரனுக்கு உடுப்பிட்டி தொகுதியும், திருமதி ரவிராஜ் சசிகலாவுக்கு சாவகச்சேரி தொகுதியும், தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு மானிப்பாய் தொகுதியும், பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

மேலும், இமானுவல் ஆர்னோல்ட்டுக்கு, யாழ்ப்பாண தொகுதியும், ஈ. சரவணபவனுக்கு வட்டுக்கோட்டை தொகுதியும், பா.கஜதீபனுக்கு ஊர்காவற்துறை தொகுதியும், சிவஞானம் சிறிதரனுக்கு கிளிநொச்சி தொகுதியும், சுரேந்திரன் குருசாமிக்கு- கோப்பாய்த் தொகுதியும்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *