Tuesday , September 29 2020
Breaking News

கடற்படையினர் மத்தியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம்

கடற்படையினர் மத்தியில் ஏற்பட்ட கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வெலிசற கடற்படை முகாமுக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கடற்படையினர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 1290 பேர், வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் வெலிசற கடற்படைத் தளம், தனிமைப்படுத்தல் பகுதி என்ற நிலையில் இருந்தும் விரைவில் விடுவிக்கப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார். அதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 647 கடற்படையினர் இதுவரை குணமடைந்துள்ளனர் என்றும் தற்போது, 227 கடற்படையினர் மாத்திரமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.அதேவேளை, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 559 பேருக்கு நேற்று வரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *