Wednesday , September 30 2020
Breaking News

இலங்கையில் இராணுவ ஆட்சி – பிரைடே போரம் எச்சரிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்டுள்ள,
செயலணி தொடர்ந்து செயற்பட்டால், இலங்கையில் இராணுவ
ஆட்சியை உருவாக்கி விடும் என்று, பிரைடே போரம் எனப்படும்,
வெள்ளிக்கிழமை மன்றம் எச்சரித்துள்ளது.

இலங்கையின் சிவில் செயற்பாட்டாளர்கள், கல்விமான்கள் பலரை
உள்ளடக்கிய, பேராசிரியர் சாவித்திரி குணசேகர தலைமையிலான,
வெள்ளிக்கிழமை மன்றம், இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஜனாதிபதி எந்த காரணத்தையும் வெளியிடாமல்
தற்போது பணியிலுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு அளவுக்கதிகமான
அதிகாரத்தை வழங்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்
என்றும், பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான இந்த செயலணிக்கு,
சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம்
வழங்கப்படடுள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது.

நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தான நிலையில்லை என
ஜனாதிபதியும், அமைச்சர்களும் தொடர்ச்சியாக கூறி வந்துள்ள
நிலையிலேயே இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், அரசமைப்பின் கட்டுப்பாட்டிற்கு வெளியே, நிறைவேற்று
அதிகாரத்தின் ஏனைய பிரிவுகளிற்கு வெளியே இயங்க கூடிய
அமைப்புகளை ஜனாதிபதியால் உருவாக்க முடியும் என்ற நிலைப்பாடும்
தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்றும் வெள்ளிக்கிழமை மன்றம்
சுட்டிக்காட்டியுள்ளது,புதிய செயலணிகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் விதத்தில் அமைந்துள்ளனவா அல்லது பலவீனப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளனவா என்பதை ஜனாதிபதி ஆராய வேண்டும் என்றும், வெள்ளிக்கிழமை மன்றம் கோரியுள்ளது.

இது நாட்டின் அரசமைப்பு, அடிப்படை சட்டங்களிற்கு உட்பட்டதா?
என்பதையும், ஆராய வேண்டும் என்றும், அந்த அமைப்பு கேட்டுக்
கொண்டுள்ளது.இதேபோன்று இராணுவ அதிகாரிகள் இந்த செயலணியில் இடம்பெறுவதற்கான வேண்டுகோளை ஏற்க கூடாது என்றும், கேட்டுக்

கொண்டுள்ள வெள்ளிக்கிழமை மன்றம், அவர்கள் அரசமைப்பினை
பாதுகாத்து, மதித்து நடப்பதாக, சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்
என்பதையும் நினைவுபடுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *