Tuesday , September 29 2020
Breaking News

கொரோனா தொற்று ஏற்பட்டாலும் தேர்தல்

மீண்டும் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டாலும், திட்டமிட்டவாறு,
ஓகஸ்ட் 5ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது என்று தேர்தல்கள்
ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்டாலும், சுகாதார அதிகரிகளின்
ஆலோசனையுடன், முடக்கப்பட்ட இடங்களில், விசேட வாக்களிப்பு
நிலையங்களை அமைத்து, பொதுத் தேர்தலை நடத்தி முடிப்பது என்று
தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம், சமன் சிறி ரத்நாயக்க இந்த
தகவலை வெளியிட்டுள்ளார்.மீண்டும் தேர்தலை ஒத்திவைக்காமல், முன்னெடுத்துச் செல்லும்வகையில் திட்டமிடப்பட்டுள்ளாகவும், அவர் மேலும் கூறியுள்ளார்.இந்த திட்டத்தின்படி, சூழ்நிலையைப் பொறுத்து, முடக்கப்பட்ட பகுதியில் அல்லது வெளியில், வாக்களிப்பு நிலையம் அமைக்கப்படும்.வெளியில் வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படும்.

நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் கீழ், வாக்களிப்பு நிலையத்தின்
இடத்தை மாற்றுவதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரம்  அளிக்கப்பட்டுள்ளது, சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, தனிமைப்படுத்தலுக்கு உள்ளானவர்கள், வாக்களிக்க ஏதுவாக தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்கவும், தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே இரண்டு தடவைகள் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில்,
மீண்டும் தேர்தலை ஒத்திவைக்காமல், அதனை முன்னெடுத்துச்
செல்வதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக
தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *