Friday , September 25 2020
Breaking News

பொதுத் தேர்தலின் போது மை பூசுவதற்கு புதிய நடவடிக்கை

எதிர்வரும், ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்
தேர்தலின் போது, வாக்காளர்களின் விரல்களில், மை பூசுவதற்கு,
காதுகளை சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் பஞ்சு, பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீர்கொழும்பு, புனித செபஸ்தியார் கல்லூரியில் நேற்று நடத்தப்பட்ட
மாதிரி வாக்கெடுப்பின் போது, வாக்களித்த வாக்காளர்களின்
கைவிரலில், காதுகளை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும், பஞ்சு மூலமே
மை பூசப்பட்டுள்ளது,நேற்றுக் காலை 8.30 மணி தொடக்கம், 12.30 மணி வரை, 200 வாக்காளர்கள் பங்கேற்ற இந்த மாதிரி வாக்கெடுப்பு,
வெற்றியளித்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதேவேளை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில இடங்களில் இன்றும் மாதரி
வாக்கெடுப்பை நடத்தப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு
தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *