Monday , September 28 2020
Breaking News

நாடாளுமன்றத் தேர்தல்கள் தொடர்பில் புதிய மாற்றம்

வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களின் பங்கேற்பு இல்லாமலேயே
இம்முறை நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளதாக செய்திகள்
கூறுகின்றன. எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள், இலங்கையில் இடம்பெறம் தேர்தல்களை
கண்காணிப்பதற்காக வருகை தருவது வழக்கமாகும்.

இந்த நிலையில், தற்போது, விமானப் பயணக் கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள்
இல்லாமலேயே இம்முறை நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும்
என்றும் கூறப்படுகிறது கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வெளிநாட்டு கண்காணிப்புக் குழுக்களை அணுகிய போது, தொற்றுச் சூழ்நிலையை சுட்டிக்காட்டி கண்காணிப்பதற்கான வாய்ப்புகளை நிராகரித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இதனால் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இல்லாமலேயே இம்முறை
தேர்தல்களை நடத்தும் நிலை ஏற்படலாம் என்றும் அந்த செய்திகள்
மேலும் தெரிவித்தன.

அதேவேளை, இம்முறை பொதுத் தேர்தலை கண்காணிப்பதற்கான
தமது திட்டங்கள் தொடர்பாக, உள்ளூர் கண்காணிப்பு குழுக்களான
பவ்ரல் மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம்
என்பனவும் இன்னமும் தமது திட்டங்களை வெளிப்படுத்தவில்லை.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *