Monday , September 28 2020
Breaking News

வடக்கு ரயில் பாதை திட்டத்துக்கு வரி விலக்கு

வடக்கு ரயில் பாதையை இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி
செய்வதற்கான திட்டத்தை முன்னெடுப்பதற்கு, வரி விலக்கு
அளிப்பதற்கு, அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம்
அளிக்கப்பட்டுள்ளது.

மாஹோவில் இருந்து ஓமந்தை வரையிலான ரயில் பாதை 91
மில்லியன் டொலர் செலவில், அபிவிருத்தி செய்யப்படவுள்ளது,
இந்தப் பணிகளை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில், இந்தியாவின்
இர்கோன் நிறுவனத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம், இலங்கை அரசாங்கம்
கைச்சாத்திட்டிருந்தது.

எனினும், இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில், இழுபறிநிலை
காணப்பட்டு வந்தது. நிலையில், அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும்,ஜனாதிபதி கோட்டாயப ராஜபக்சவும் நடத்திய தொலைபேசி உரையாடலின் போது, இந்தியாவின் நிதியுதவியில் மேற்கெள்ளப்படும் திட்டங்களை துரித்தப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இணக்கம் காணப்பட்டது.

இதையடுத்து கடந்த 10ஆம் திகதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்,
வடக்கு ரயில் பாதையை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை
முன்னெடுப்பதற்கு இந்தியாவின் இர்கோன் நிறுவனத்துக்கு வரி
விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரையான வடக்கு ரயில்
பாதையை இந்தியாவே அமைத்துக் கொடுத்தது. இதனை மாஹோ
வரை நீடிக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மாஹோ- ஓமந்தை ரயில்பாதை சீரமைக்கப்பட்டால், மணிக்கு 120 கி.மீ
வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *