Tuesday , September 29 2020
Breaking News

பொதுத் தேர்தல் வாக்களிப்பு நேரத்தை அதிகரிக்க கோரிக்கை

பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நேரத்தில் ஒரு மணித்தியாலத்தில்
நீடிக்குமாறு, தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தேர்தல்கள்
ஆணைக்குழுவிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும், சுகாதார வழிகாட்டு
முறைகளுக்கு அமைய தேர்தலை நடத்தும் போது வாக்களிப்பதற்கு
போதிய நேரம் கிடைக்காது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கபே
அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் காலையில் 30 நிமிடங்களும் மாலையில் 30 நிமிடங்களுமாக,
வாக்களிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தால், அதிகரிக்குமாறு , கபே
அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.இலங்கையில் தே்தல்களின் போது, காலை 7 மணி தொடக்கம் நான்கு மணி வரை வாக்களிப்பு இடம் பெறுவது வழக்கம்.எனினும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்குச்சீட்டு நீளமாக இருந்த காரணத்தினால், வாக்களிப்பதற்கு கூடுதல் நேரம் தேவைப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, மாலை 5 மணி வாக்கெடுப்பு நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடக்கவுள்ள பொதுத்
தேர்தலின் போது. காலை 6.30 மணிக்கு ஆரம்பித்து, மாலை 4.30 மணி
வரை வாக்களிப்பை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *