Tuesday , September 29 2020
Breaking News

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணை – ஜனாதிபதி ஆணைக்குழு

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணை என ஜனாதிபதி
ஆணைக்குழு, மூத்த அரச சட்டத்தரணி ஜனக பண்டாரவை
முன்னிலையாகுமாறு விடுத்த அழைப்பாணைக்கு, சட்டமா அதிபர்
எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அவன் கார்டே, நிறுவனத்தின் ஆயுதங்கள் தொடர்பான வழக்கில், மூத்த
அரச சட்டத்தரணி ஜனக பண்டாரவை ஜனாதிபதி ஆணைக்குழு
விசாரணைக்காக அழைத்துள்ளது.

எனினும், ஆணைக்குழுக்கள் விசாரணைச் சட்டத்தின் 16ஆவது பிரிவைச்
சுட்டிக்காட்டி, சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா இதற்கு எதிர்ப்புத்
தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.

அதில், சட்டமா அதிபரையோ அல்லது அவரது திணைக்கள அதிகாரிகளையோ விசாரிக்கும் ஆணை, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு
வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அரச சட்டத்தரணி ஜனக பண்டாரவுக்கு, ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளதானது, சட்டத்துக்கு உட்பட்டது அல்ல என்றும், இந்த அழைப்பாணை செல்லுபடியற்றது என்றும் சட்டடமா அதிபர்
கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *