Monday , September 28 2020
Breaking News

கிளிநொச்சியில் சந்தேகத்துக்குரிய இடங்களில் சுற்றிவளைப்பு

கிளிநொச்சியில் தொடர்ந்தும் சந்தேகத்துக்குரிய இடங்களைச் சுற்றிவளைத்து தேடுதல்களை
நடத்தப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கண்டாவளை, தர்மபுரம் பகுதிகளில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது, சுமார் 400 வீடுகள் சோதனையிடப்பட்டு அங்கிருப்பவர்கள் தொடர்பாக
விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த நடவடிக்கையில் பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் ஈடுபட்ட அதேவேளை,
இராணுவத்தினரும் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் கரும்புலிகள் நாள் நிகழ்வை அனுஷ்டிக்கப்பட்ட நிலையிலேயே இந்த
தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது..
இந்த சோதனைகளின் போது, சந்தேகத்துக்குரிய எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை.
எனினும், ஒருவர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள பொலிசார், எதிர்காலத்திலும் சந்தேகத்துக்குரிய
இடங்களில் தொடர்ந்தும் சுற்றிவளைப்பு தேடுதல்கள் மேற்கொள்ளப்படும் என்று
கூறியுள்ளனர்.
அதேவேளை, கிளிநொச்சியில் தீவிரவாத செயற்பாடுகள் குறித்து விழிப்புடன் இருப்பதாக,
இராணுவத் தரப்பும் தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *