Saturday , September 26 2020
Breaking News

தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுத் தருவேன்!எம்.ஏ.சுமந்திரன்.

ஆயுதம் ஏந்திப் போராடி, தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுத் தருவேன் என்று தான்
வாக்குறுதி தரப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்
எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு
கூறியுள்ளார்.

அஹிம்சை வழியில், இராஜதந்திர முறையில், பேச்சுவார்த்தை மூலம் எவை எல்லாவற்றையும் பெறமுடியுமோ அவை எல்லாவற்றையும் பெற அயராது உழைப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

தொடர்ச்சியாக சமஷ்டியை எதிர்த்தவர்களும் கேலி செய்தவர்களும் இன்று அதை பெற்றுத்
தருவதாக கூறுகின்றார்கள் எனக் குறிப்பிட்டுள்ள சுமந்திரன், அவ்வாறு கூறியவர்கள் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
நிரந்தரமான அரசியல் தீர்வொன்றிற்கு கணிசமான சிங்கள மக்களின் ஆதரவைப் பெற
வேண்டியது அவசியம் என்றும், பிரிக்கமுடியாத நாட்டுக்குள்ளேயே தீர்வை கோருவதாகவும்
சுமந்திரன் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *