Thursday , September 24 2020
Breaking News

ஆதாரம் இருந்தால் வெளியிடுமாறு கருணாவுக்கு சிவாஜிலிங்கம் சவால்.

புலிகளை ஆதரித்து, விடுதலைப் புலிகளின் மேடையில் தான் பேசிய ஆதாரங்கள்,அல்லது காணொளி ஏதும் இருந்தால் அதனை வெளியிடுமாறு, கருணாவுக்கு சவால் விடுப்பதாக, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், தெரிவித்துள்ளார்.
செல்வம் அடைக்கலநாதனும் சிவாஜிலிங்கமும் விடுதலைப் புலிகளின் மேடையில்,
புலிகளுக்கு ஆதரவாக பேசிய காணொளிகள் தன்னிடம் இருப்பதாகவும், அந்த
காணொளிகளை வெளியிட்டால் இவர்களின் நிலை அதோ கதி தான் என்றும், கருணா
எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், கூறியிருந்தார்.
இதுகுறித்து, யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போது
கருத்து வெளியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கம், அவ்வாறு நாங்கள் பேசியிருந்தால், அதனை ஏற்றுக்கொள்வோம் என்றும், உண்மையை கூறுவதற்கு ஒருபோதும் பயப்பட போவதில்லை என்றும் கூறினார்.
மக்களின் நலனுக்காகவும் அவர்களின் விடுதலைக்காகவும் எந்த நேரத்திலும் சாவினை
தழுவிக் கொள்ள தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், புலிகளை ஆதரித்து, விடுதலைப் புலிகளின் மேடையில் தான் பேசிய ஆதாரங்கள், அல்லது காணொளி ஏதும் இருந்தால் அதனை வெளியிடுமாறும், கருணாவுக்கு சவால் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *