Wednesday , September 30 2020
Breaking News

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை முடக்க முனைகிறது இராணுவம் – சட்டத்தரணி சுகாஸ்

தமக்கு தேவையானவர்களை வெற்றி பெற வைக்கவும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை முடக்கவும் இராணுவத்தினால் சதி செய்யப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி க.சுகாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இந்தக்
குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நேற்றுமுன்தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகம் மற்றும்
வட்டுக்கோட்டை அலுவலகம், நல்லூர் அலுவலகம் என்பன இராணுவத்தினராலும்,
பொலிசாராலும், முற்றுகையிடப்பட்டதாகவும், சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்தார்.
இந்த முற்றுகையை கரும்புலிகள் தினத்திற்கான முற்றுகையாக தாங்கள் கருதவில்லை
என்றும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைகளை குழப்பியடிக்கவே
இராணுவம் முற்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரான அங்கஜன் இராமநாதனை வெற்றி பெறவைப்பதற்கு இராணுவம் மும்முரமாக செயற்பட்டு வருவதாகவும், சுகாஸ் மேலும் கூறியுள்ளார்.
இவ்வாறாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரங்களை முடக்குவதன் மூலம்,
எத்தகைய நோக்கத்துடன் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை தமிழ் மக்கள்
புரிந்து கொண்டுள்ளனர். என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *