Monday , September 28 2020
Breaking News

திருமண விழாக்களில் 300 பேருக்கு அனுமதி.

திருமண விழாக்களில் அதிகபட்சமாக 300 விருந்தினர்கள் பங்கேற்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

திருமண விழாக்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க நேற்று மாலை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, திருமண விழாகளில் அதிகபட்சமாக 300 பேர் கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தின் ஆசனங்களின் எண்ணிக்கையில் அரைப்பகுதி வெறுமையாக இருக்க வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், திருமண விழாக்களில் கலந்து கொள்வோர், சமூக இடைவெளியைப் பேணுவதோடு, மண்டபங்கள் தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, திருமண விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை
விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர், திருமண விழாக்கள் நிகழ்வுகளில் பங்குபற்றுபவர்களில் 100 பேர் பங்குபற்றுவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *