Friday , September 25 2020
Breaking News

டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருப்பதாக, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிச்சயமாக மாகாண சபை தேர்தல் நடத்தப்படும்” என்றும் குறிப்பிட்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், விருப்பு வாக்கு முறைமை நீக்கப்பட்டு முரண்பாடற்ற தேர்தல் முறைமை புதிய அரசாங்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பாரிய போராட்டத்திற்கு மத்தியில் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது என்றும்,
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதே
அரசாங்கத்தின் நோக்கம் என்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
இதன் பின்னர், அரசியலமைப்பு புதிய அரசாங்கத்தினால், நாடாளுமன்றத்தின்
பெரும்பான்மை ஆதரவுடன் திருத்தியமைக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *