Tuesday , September 29 2020
Breaking News

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம், ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

கொரோனா தடுப்புக்கான சுகாதார வழிகாட்டு முறைகளுக்கு அமைய நடத்தப்படவுள்ள இந்த தேர்தலின் போது, வாக்களிப்பதற்கு, மேலதிகமாக ஒரு மணித்தியாலத்தை வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வழக்கமாக காலை 7 மணிக்கு ஆரம்பிக்கும் வாக்களிக்கு, மாலை 4 மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்படும். ஆனால் இம்முறை, காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வாக்களிக்க முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

சுகாதார வழிகாட்டு முறைகளால் வாக்களிப்பின் போது ஏற்படக் கூடிய தாமதங்களைக் கருத்தில் கொண்டே, வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *