Monday , September 28 2020
Breaking News

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று அடையாளம்
காணப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,077 ஆக அதிகரித்துள்ளது. மாலைதீவிலிருந்து வந்த ஒருவருக்கே நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை, தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும். 1,917 ஆக
அதிகரித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இதனிடையே, சவூதி அரேபியாவில் இருந்து இன்று விமானம் மூலம் 260பேர் வரை அழைத்து வரப்படவுள்ள நிலையில், விமான நிலைய சுகாதார அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய பலர் அண்மையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.

எனவே, அதிகளவானோர் இன்று நாடு திரும்பவுள்ள நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுகாதார அதிகாரிகள் அதிகபட்ச விழிப்புடன் தயார்நிலையில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *