Saturday , September 26 2020
Breaking News

முகக் கவசம் அணியாவிடின் 10 ஆயிரம் ரூபா அபராதம், 2 வருட சிறைத்தண்டனை

இந்தியாவின் கேரள மாநிலத்தில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலையடுத்து கேரளாவில், ஒரு வருடத்துக்கு பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் எச்சில் துப்புதல் தடை செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளி
கடைப்பிடித்தலும் கட்டாயமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும் இறுதிச் சடங்குகளில் 20 பேரும் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடைகளில் 25 பேருக்கு மேல் நிற்க அனுமதி கிடையாது.
வணிகர்கள் வாடிக்கையாளர்களுக்கு தொற்று நீக்கி வழங்கி பாதுகாப்பு நடவடிக்கை
மேற்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விதிமுறைகளை மீறி, பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதமும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *