Monday , September 28 2020
Breaking News

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பம்.

இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்
கிரிக்கெட் போட்டி லண்டனின், சவுதம்டன் நகரில் நாளை தொடங்கவுள்ளது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக, மேற்கிந்தியத் தீவுகள்
கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நாளை தொடங்குகிறது.
கடந்த மார்ச் 13ஆம் திகதி சிட்னியில் நடந்த அவுஸ்ரேலியா-நியூசிலாந்து அணிகள்
இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு பின்னர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.
117 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும்
தொடங்கவுள்ளன.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நீண்ட நாட்கள்
நடைபெறாமல் தடைப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த போட்டியில் மோதும் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் அனைவரும், போட்டி நடைபெறும் மைதானத்துக்கு அண்மையில் உள்ள விடுதியில் மருத்துவ பாதுகாப்பு வசதிகளுக்கு மத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர், பயிற்சியை தொடங்கிய இரு அணியினரும்,
பலமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, களம் காணவுள்ளனர்.
இந்தப் போட்டியில், பந்து மீது எச்சிலை தேய்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பந்தை தொட்ட பின்னர், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
கட்டுப்பாட்டை மீறி பந்தில் எச்சிலை தேய்த்தால் இன்னிங்சில் 2 முறை எச்சரிக்கை
விடுக்கப்படும். அதனையும் மீறினால் பந்து வீச்சாளரைத் தண்டிக்கும் வகையில், 5 ஓட்டங்கள் தண்டனையாக கொடுக்கப்படும்.

போட்டியின் போது வீரர்கள் யாரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அவருக்கு தகுந்த மாற்று வீரரை பயன்படுத்தி கொள்ளலாம் என்பது உள்பட பல தற்காலிக வழிகாட்டுதல்கள் இந்த போட்டி தொடரில் அமுல்படுத்தப்படுகிறது.
இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *