Thursday , September 24 2020
Breaking News

நேபாளப் பிரதமர் சர்மா ஒலியின் எதிர்காலம் குறித்து….!

நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலியை பதவி விலகுமாறு ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் போர்க்கொடி துாக்கியுள்ள நிலையில், நாளை நடக்கவுள்ள கட்சியின் நிலைக்குழு கூட்டத்தில், அவரது எதிர்காலம் குறித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
நேபாள கம்யூனி்ஸ்ட் கட்சியின் நிலைக் குழு கூட்டம் பலுவடாரில் உள்ள பிரதமரின்
அதிகாரபூர்வ இல்லத்தில் கடந்த 30ஆம் திகதி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட ஆளும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த புஷ்ப கமல் பிரசண்டா, இந்தியா மீது பொய்யன குற்றச்சாட்டை கூறி நல்லுறவை பாதிக்கும் கையில் பேசியதற்காக பதவி விலக வேண்டும் என்று ஷர்மாவை கேட்டுக் கொண்டார்.
இதனால் பிரதமர் கே.பி. சர்மா ஒலிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கே.பி.சர்மா ஒலியை பிரதமர் பொறுப்பில் இருந்து நீக்குவது தொடர்பாகவும் அரசியல்
எதிர்காலத்தை தீர்மானிப்பது தொடர்பாகவும் தேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற இருந்தது.
திடீரென இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் நேபாளப் பிரதமர் சர்மா ஒலியின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *