Monday , September 28 2020
Breaking News

பாகிஸ்தான் சுகாதார அமைச்சர் ஜாபர் மிர்சாவுக்கு கொரோனா.

பாகிஸ்தான் சுகாதார அமைச்சர் ஜாபர் மிர்சாவுக்கும் நேற்று கொரோனா தொற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கொரோனா தொற்றால் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 818 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு திகமும் 4 ஆயிரம் பேர் வரை தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.
அத்துடன் அரசியல் பிரமுகர்கள் மத்தியிலும் கொரோனா தீவிரமாகப் பரவி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷிக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அத்துடன், பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத், நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் கைசர் உள்ளிட்ட ஏராளமான அரசியல்வாதிகளும், கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் சுகாதார அமைச்சர் ஜாபர் மிர்சா நேற்று தனது டுவிட்டரில், தனக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது என்றும், மருத்துவ ஆலோசனைப்படி, தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள, லாகூரில் பணியாற்றி வந்த 48 மருத்துவர்கள் பதவி விலகியுள்ளனர்.

சுகாதார அமைப்பில் காணப்படும் மோசமான பணிச்சூழல் காரணமாகவே இவர்கள் பதவி விலகியுள்ளாக இளம் மருத்துவர் சங்கத்தின் தலைவர் சல்மான் ஹசீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் மருத்துவர்கள் அதிகம் தேவைப்படும் இந்த முக்கியமான நேரத்தில்,
மருத்துவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, பதவி விலகிச் செல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *