Wednesday , September 30 2020
Breaking News

பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் காலமானார்.

புரட்சிக் கவிஞர் என அழைக்கப்படும் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் தனது 92வது வயதில் நேற்று காலமானார்.
புதுச்சேரியில் வசித்து வந்த மன்னர் மன்னன் ஒரு தமிழறிஞர் ஆவார்.
பாரதிதாசனின் வரலாற்றையும், தமிழ் மொழியின் பெருமைகளை பறைசாற்றும் பல நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

இந்தியாவின் சுதந்திர போராட்டத்திலும் பங்கெடுத்திருந்த மன்னர்மன்னனின், தமிழ் மொழிக்கான சேவையை பாராட்டி, தமிழக அரசு திருவிக விருது, கலைமாமணி விருது ஆகிய விருதுகளை அளித்துள்ளது.

புதுச்சேரியில் வாழ்ந்து வந்த மன்னர்மன்னன் வயது மூப்பினால் நேற்று காலமானார்.
அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை புதுச்சேரியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *