Tuesday , September 29 2020
Breaking News

174 கைதிகளுக்கு PCR பரிசோதனை…..

வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் இருந்த கைதிகளுக்கு PCR சோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான கைதி இதற்க்கு முன்னர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்தமையால், அங்குள்ளவர்களுக்கும் PCR சோதனை மேற்கொள்ளவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

அதற்கமைய வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 174 கைதிகளுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இவர்கள் அனைவருக்குமான PCR சோதனைக்குரிய பெறுபேறுகள் இன்றிரவு கிடைக்கும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு குறிப்பிப்பிடுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *