Wednesday , September 30 2020
Breaking News

சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் கைது!

மன்னர்- பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் பேசாலை போலீசாரினால் மன்னார் மாவட்ட நீதிமன்றில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை (04) பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் சந்தேகத்திட்க்கிடமாக நடமாடிய குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று கைது செய்ய பட்டு பேசாலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

குறித்த நபரை எதிர் வரும் 13 ஆம் திகதி வரை வவுனியா சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில், வவுனியா வைத்தியசாலையில் மனநலம் குன்றியோருக்கான சிகிச்சை வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இவரின் சந்தேகத்திட்க்கு இடமான நடமாட்டம் தொடர்பாக புனித வெற்றி நாயகி ஆலய பங்குத்தந்தை, மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆகியோர் வழங்கிய தகவலுக்கு அமைய, போலீசார் CCTV காணொளிகளை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், யாழ்.புனித மரியன்னை பேராலய வளாகத்தில் நேற்று போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு இருந்தார்.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்டவர் மனநலம் குன்றியவர் எனவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் போலீஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ஜாலிய செனரத்ன தெரிவித்தார்.

சந்தேக நபரிடமிருந்து பொதியில் பழைய ஆடைகளே இருந்ததாகவும் போலீசார் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *