Tuesday , September 29 2020
Breaking News

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு……பொலிஸ் தரப்பு மனு.

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுக்கு
தடை விதிக்கக் கோரி, மல்லாகம் நீதிமன்றில் மானிப்பாய் பொலிசாரால்
மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1995ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி முன்னேறிப் பாய்தல் இராணுவ
நடவடிக்கையால் இடம்பெயர்ந்து நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில்
புகலிடம் தேடியிருந்த பொதுமக்கள் மீது விமானப்படையின் புக்காரா
விமானங்கள் குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தன.
இந்தச் சம்பவத்தில் 165 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயப் படுகொலையின் 25 ஆவது ஆண்டு
நினைவேந்தல் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்த நிலையிலேயே, இது தொடர்பான நிகழ்வுக்கு தமிழ்த் தேசியக்
கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பொதுமக்கள்
பங்கேற்பதற்கு தடைவிதிக்கக் கோரி, மானிப்பாய் பொலிசார் நேற்று
மல்லாகம் நீதிபதியிடம் விண்ணப்பம் செய்தனர்.
இதனை ஆராய்ந்த மல்லாகம் நீதிவான், சிவாஜிலிங்கம் தரப்பின்
கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக அவரை இன்று நண்பகல் மன்றில்
முன்னிலையாகுமாறு கட்டளையிட்டுள்ளார்.
இந்த மனு தொடர்பாக மல்லாகம் நீதிமன்றம் இன்று கட்டளை
பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *