Monday , September 28 2020
Breaking News

ஜனாதிபதி கோட்டா அரசாங்கம், இராணுவ தலைமையிலான பொறிமுறைகளையே முன்னெடுக்கும் – ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான எதிர்கால அரசாங்கம், இராணுவ தலைமையிலான பொறிமுறைகளையே தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில்
அமைக்கப்பட்டுள்ள உயர் அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி
செயலணிகள் குறித்து, எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே பேராசிரியர்
ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

சட்டம், ஒழுங்கை முன்னேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் உரிமை ஜனாதிபதிக்கு உள்ளது என்றும் குறிப்பிட்ட ஜிஎல்.பீரிஸ், அசாதாரண சவால்களை எதிர்கொள்வதற்கு சட்டத்துக்கு உட்பட்ட வகையில் இராணுவம் தலைமையிலான பொறிமுறைகளை கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் என்றும் குறிப்பிட்டார்.

சிவில் நிர்வாக செயற்பாடுகளில் இராணுவத் தலையீடுகள் அதிகரித்துள்ளதாகவும், நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகருவதாகவும் எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளையும் ஜிஎல்.பீரிஸ், நிராகரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *