Wednesday , September 30 2020
Breaking News

13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தினால் இலங்கை 10 துண்டுகளாக உடையும் – உதய கம்மன்பில எச்சரிக்கை.

13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் இலங்கை 10 துண்டுகளாக பிளவுபடும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச 13 வது திருத்தத்தை பாதுகாப்பேன் என்று உறுதியளித்துள்ளார் இது கேலிக்குரியது.

13 ஆவது திருத்தச்சட்டத்தின் படி, எந்த நேரத்திலும், ஜனாதிபதியினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரே மாகாணமாக மாற்ற முடியும். 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் இலங்கை 10 துண்டுகளாக பிளவுபடும் என்று குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தச்சட்டம் பொலிஸ் அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு வழங்குகிறது. இந்த திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு 33 ஆண்டுகளாகியும், இதுவரை எந்த அரசாங்கமும், பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்கவில்லை. 13 ஆவது திருத்தச்சட்டத்தில் காணி அதிகாரங்களும் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தினால், தொல்பொருள்
இடங்களும் கூட மாகாணசபைகளின் கீழ் வந்து விடும்” என்றும் அவர்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *