Wednesday , September 30 2020
Breaking News

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுள்ளது

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை கடற்படை, புதிதாக SLNS கவன்திஸ்ஸ என்று புதிய தளத்தை அமைத்துள்ளது.

இந்த தளத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா திறந்து வைத்துள்ளார். சீன நிறுவனத்தின் வசமுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ள நிலப்பரப்பு மற்றும் அதனை அண்டியுள்ள கடற்பரப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த புதிய தளம் அமைக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கடந்து செல்லும் கப்பல்களைக் கண்காணிக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கடற்படைத்

தளத்தில் 850 கடற்படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்
தெரிவிக்கின்றன. இந்த கடற்படைத் தளத்துக்கு உதவியாக, கிரிந்தி ஓயா, சூரிய வெவ, அமதுவ ஆகிய இடங்களில் கடற்படையின் உப பிரிவு முகாம்கள்
அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *