Monday , September 28 2020
Breaking News

வெலிக்கடை சிறைச்சாலையில்……கொரோனா….

வெலிக்கடை சிறைச்சாலையில், சிறைக்கைதி ஒருவருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஆயிரத்துக்கும்
அதிகமானோருக்கு அவசரமாக பிசிஆர் சோதனைகளை நடத்துவதற்கு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

வெலிக்கடைச் சிறைக் கைதிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து,
சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகள் 500
பேருக்கு நேற்று பிசிஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, தொற்றுக்குள்ளான கைதி முன்னதாக தடுத்து
வைக்கப்பட்டிருந்த பொலன்னறுவ சிறைச்சாலை மற்றும், கந்தகாடு
புனர்வாழ்வு நிலைய தனிமைப்படுத்தல் முகாம் ஆகியவற்றில்
உள்ளவர்களையும், பிசிஆர் சோதனைக்குட்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.

கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில், 434 கைதிகளும், 131 அதிகாரிகளும்
உள்ள நிலையில் அவர்களுக்கு சோதனை நடத்தப்படவுள்ளது.
அதேவேளை குறித்த கைதிக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பதைக்
கண்டறிவதற்கான விசாரணைகளில் இராணுவ அதிகாரிகள் மற்றும்
புலனாய்வு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *