Wednesday , September 30 2020
Breaking News

தமிழகத்தில் இனி ஊரடங்கு நீடிப்பு இல்லை……

தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப்பரவலாக மாறவில்லை என்றும், எனவே
இனிமேலும் ஊரடங்கை நீடிக்கும் வாய்ப்பு இல்லை என்றும் தமிழக
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் 127 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா
சிறப்பு சிகிச்சை மையத்தை நேற்று திறந்து வைத்த பின்னர், தமிழக முதல்வர்
எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

இதன்போதே அவர், தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப்பரவலாக மாறவில்லை
என்றும், சென்னையில் கடுமையான ஊரடங்கு நடவடிக்கையால் கடந்த 2 நாட்களாக
பாதிப்பு குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்று கூறிய
முதல்வர், மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டியுள்ளது. அதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமுல்படுத்த வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.
பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும். அரசின் நிதி நிலைக்கு ஏற்ற வகையில் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகிறோம் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி மேலும்
கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *