Wednesday , September 30 2020
Breaking News

உதைபந்தாட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீர்ர் ஒருவர் மின்னல் தாக்கி படுகாயம்…

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிற்கு அருகில் உதைபந்தாட்டப் பயிற்சியில்
ஈடுபட்டிருந்த வீர்ர் ஒருவர் மின்னல் தாக்கி படுகாயமடைந்துள்ளார்.

மொஸ்கோவிற்கு அருகில் உள்ள ஓரெகோவோ-ஜுவோ நகரில், ஜனமயா கிளப் அணி
வீரர்கள் வார இறுதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, கோல் காப்பாளரான இவான்
ஜாபோர்ஸ்கி என்ற வீரரை மின்னல் தாக்கியுள்ளது.
இதனால் அவர் அந்த இடத்திலே நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக பயிற்சியாளர் இவானின் முதலுதவி சிகிச்சை அளித்தார்.
அதன் பின் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அதைத்
தொடர்ந்து ஹெலிகொப்டர் மூலம் மொஸ்கோவில் உள்ள மருத்துவமனைக்கு
மாற்றப்பாட்டுள்ளார்.

Football.

அன்றைய தினம் பயிற்சிக்கு முன்னரும், பின்னரும், வானம் தெளிவாகவே
இருந்தபோதும், மின்னல் எப்படி அவரை தாக்கியது என்பது மர்மமாகவே உள்ளது.
இவான் ஜாபோர்ஸ்கி கழுத்தில் அணிந்திருந்த உலோக சங்கிலியால், அவரை மின்னல்
தாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது இவான் கோமா நிலையில் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை
அளிக்கப்பட்டு வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவரது உடல்நிலை உறுதியாகவே இருக்கிறது என்று தெரிவித்துள்ள
அவரின் காதலியான எலினா, சுயநினைவை பெற்றாலும், அந்த அதிர்ச்சி காரணம் அவர்
மீண்டும் கோமா நிலைக்கு சென்று விடுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *