Thursday , September 24 2020
Breaking News

அவுஸ்ரேலியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாக வாய்ப்பு…

அவுஸ்ரேலியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாக வாய்ப்புள்ளதால்,
ஆறு வாரங்களுக்கு மெல்பேர்னில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்ரேலிய
அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அவுஸ்ரேலியாவிலும் மிகவும் வேகமாகப் பரவியது. அங்கு
பிறப்பிக்கப்பட்ட கடுமையான ஊரடங்கு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால், கடந்த மே மாத இறுதியில், கொரோனா பரவல், 75 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இதனால், அவுஸ்ரேலியா முழுவதும் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு, 10 நாள்களுக்கு முன்னர் தளர்த்தப்பட்டு, மக்கள் வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவுஸ்ரேலியாவின் இரண்டாவது பெரிய
நகரமாக மெல்பேர்னில், கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது.
முன் எப்போதும் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில், 191 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வால், கொரோனாவின் இரண்டாவது அலை உருவாக வாய்ப்புள்ளது.
இதைத்தடுக்க, அடுத்து வரும் ஆறு வாரங்களுக்கு மெல்பேர்னில் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அவுஸ்ரேலிய அரசு தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு தொடங்கியுள்ள இந்த ஊரடங்கினால், மக்கள் வீட்டை விட்டு
வெளியேறவும் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *