Monday , September 28 2020
Breaking News

பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று….

பிரேசில் ஜனாதிபதி ஜாயிர் போல்சொனாரேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
தென்அமெரிக்க நாடான பிரேசிலில், இதுவரை கொரோனா தொற்றினால், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் பிரேசில் ஜனாதிபதி ஜாயிர் போல்சனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது, இதன் போதே அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கமான அலுவலக பணிகளை மேற்கொள்வதற்கு அலுவலகம் வருவதை அவர் தவிர்த்துள்ளனார்.
இது தொடர்பாக பிரேசில் ஜனாதிபதி ஜாயிர் போல்சனாரோ நேற்று தொலைக்காட்சி
மூலம் தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல் நிலை சீராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *