Wednesday , September 30 2020
Breaking News

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது…

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக, ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு, சீனா சார்பு நிலையில்
உள்ளதால் அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்வதாக கடந்த மே மாதம், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார்.
அந்த அமைப்புக்கு வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் எனவும், அமெரிக்கா இந்த அமைப்பில் இருந்து வெளியேறும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா
வெளியேறியுள்ளதாக, ஐ.நா. பொதுச்செயலர் அன்ரனியோ குட்டரசிற்கு அமெரிக்க
ஜனாதிபதியினால், நேற்று முன்தினம் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறி விட்டது. ஐ.நா.வின்
நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் திகதி தான் இந்த வெளியேற்ற
நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வரும் என்றும், அந்த கடிதத்தில்
கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *