Monday , September 28 2020
Breaking News

லடாக்கில் இந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதல்.

லடாக்கில் இந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதல்களை
அடுத்து, இந்தோ-திபெத் படையினரை எல்லையில் நிறுத்த இந்தியா
நடவடிக்கை எடுத்துள்ளது.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலை தொடர்ந்து இந்தியா-சீனா
இடையிலான, 3,488 கி.மீ. நீள எல்லையில், தீவிர கண்காணிப்பை மேற்கொள்வதற்கு இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
குறிப்பாக இந்தோ-திபெத் படையினரை எல்லையில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மலைப்பாங்கான பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் திறன் பெற்ற இந்த படையினரை அங்கு செல்லுமாறு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, உள்நாட்டில் பணியில் இருந்த 60 கொம்பெனி இந்தோ-திபெத் படையினர் எல்லை நோக்கி நகர்ந்து வருகின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன.

இதில் 40 கொம்பெனி வீரர்கள் ஏற்கனவே எல்லையை அடைந்துள்ள நிலையில், எஞ்சிய
வீரர்களும் விரைவில் எல்லைக்கு அனுப்பப்படவுள்ளனர்.
அதேபோன்று இந்தோ-திபெத் படையில் மேலும், 9 படைப்பிரிவுகளை உருவாக்கவும்
மத்திய உள்துறை அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக இந்தோ-திபெத் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *