Monday , September 28 2020
Breaking News

போலீசார் வசமுள்ள போதைப்பொருள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

போலீஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் களஞ்சியத்தில் காணப்படும் போதைப்பொருட்களின் தொகை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

இந்த நடவடிக்கைக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. போலீஸ் போதைப்பொருள் ஒலிப்புப் பணியகத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் பொலிஸாரினால் கைப்பற்றபடுகின்ற போதைப்பொருட்களை மீளவும் போதைப்பொருள் வியாபாரிகளிடம் வழங்குவதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளமையால், இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக போலீஸ் ஊடகபேச்சளார், சிரேஷ்ட்ட போலீஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட போலீஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் 11 பேரும் இன்று (08) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் ஏனையவ்ர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுப்புப் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டதாக போலீஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *