Monday , September 28 2020
Breaking News

இராணுவ புலனாய்வு தகவல்களை ரணில் ஏற்றுக் கொள்வதில்லை – மேஜர் ஜெனரல் ஹெந்தவிதாரண சாட்சியம்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புலனாய்வுத் தகவல்களை
நம்புவதில்லை என்றும், அவருக்கு அதன் முக்கியத்துவத்தை புரிய
வைப்பது அபத்தமானது என்றும், முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர்
மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும்
ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேற்று சாட்சியம் அளித்த் போதே
அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

2001 ஆம் ஆண்டுக்கும் 2004ஆம் ஆண்டுக்கும் இடையில் பிரதமராக
பணியாற்றிய போது, இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய
புலனாய்வு தகவல்களை ரணில் விக்ரமசிங்க கவனத்தல் கொள்ளவில்லை
என்றும் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண குறிப்பிட்டுள்ளார்.

தாம் இராணுவப் புலனாய்வுப் பணியக பணிப்பாளராக இருந்த போது
இராணுவத்துக்கு பல்வேறு தடைகள் இருந்ததால்,, புலிகளுடனான
மோதலுக்கு தயாராவதற்காக கடுமையான உழைக்க வேண்டியிருருந்தது
என்றும், அவர் கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தமது புலனாய்வு தகவல்களுக்கு
செவிசாய்க்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து. புலனாய்வுத் தகவல்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள
வேண்டியதன் அவசியம் ரணில் விக்ரமசிங்கவுக்கு புரிய வைக்க
முயன்றீர்களா என்று, ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர், மேஜர்
ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அவர், ஒரு குதிரையை தண்ணீருக்கு அருகே
கொண்டு செல்ல முடியுமே தவிர, அதனைக் குடிக்க வைக்க முடியாது.
இது எனக்குத் தெரியும்.

அதனால்தான், ஜனவரி 2015 ஜனாதிபதி தேர்தல் முடிவுக்குப் பின்னர் நான்
பதவி விலகினேன். அவர்களுடன் என்னால் வேலை செய்ய முடியாது
என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் நான்
வெளியேறினேன், என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *