Monday , September 28 2020
Breaking News

இந்திய இராணுவத்தினர் 89 செயலிகளைப் பயன்படுத்த தடை.

இந்திய இராணுவத்தினர், 89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவை இந்திய இராணுவத் தளபதி வெளியிட்டுள்ளார்.

சமூக வலைதளங்கள் மூலம் நாட்டின் பாதுகாப்பு தகவல்கள் திருட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதால் இந்திய இராணுவம், தடை செய்யப்பட்ட செயலிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், ட்ரூகாலர் வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், ஹைக், ஷேர் ஹிட், செண்டெர், யூசி பிரவுசர், ஜூம், கேம் ஸ்கான்னர், பியூட்டி பிளஸ், பப்ஜி, கிளாஸ் of கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், கிளப் பக்டரி, டிண்டெர், 360 செக்யூரிட்டி, ஸ்நாப் சாட், ரெட்டிட் உள்ளிட்ட 89 செயலிகளை ராணுவத்தினர், மற்றும் ஆயுதப்படையினர் தமது ஸ்மார்ட் போன்களில் இருந்து வரும் ஜூலை 15ம் திகதியிலிருந்து நீக்க விட   வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *