Tuesday , September 29 2020
Breaking News

பாடசாலைகளை திறக்காவிட்டால், மாகாணங்களுக்கான நிதி துண்டிக்கப்படும்

அமெரிக்காவில், பாடசாலைகளை திறக்காவிட்டால், மாகாணங்களுக்கான நிதி துண்டிக்கப்படும் என, ஜனாதிபதி, டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில், கொரோனா அச்சுறுத்தலை மீறி, பாடசாலை மற்றும் கல்லுாரிகளை திறக்குமாறு, மாகாண அரசுகளுக்கு, ஜனாதிபதி, டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில், பாடசாலைகள் திறப்பு குறித்து, நேற்று, அவர், ‘டுவிட்டர்வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே உள்ளிட்ட நாடுகளில், எந்த பிரச்சினையும் இல்லாமல், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இங்கு, பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதை, அரசியல் காரணங்களுக்காக, ஜனநாயக கட்சியினர் எதிர்க்கின்றனர்.

நவம்பர் தேர்தலுக்கு முன், பாடசாலைகள் திறக்கப்பட்டால், அரசியல் ரீதியாக அவர்களின் நிலை மோசமாகும் என, ஜனநாயக கட்சியினர் கருதுகின்றனர். 

ஆனால், குழந்தைகளின் கல்விக்கு, பாடசாலைகள் திறக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. 

இதையும் மீறி பாடசாலைகளை திறக்காவிட்டால், மகாணங்களுக்கான நிதி துண்டிக்கப்படும்.என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *