Tuesday , September 29 2020
Breaking News

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ரத்து……

பாகிஸ்தானில் செப்டம்பரில் நடைபெற இருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பெற்றிருந்தாலும், அந்த உரிமையை இலங்கை கிரிக்கெட் சபைக்கு விட்டுக்கொடுப்பதாகவும், அதற்கு பதிலாக அடுத்த ஆசிய கிண்ண போட்டியை நடத்தும் உரிமையை பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அதனை வழங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் சபை  தலைவர் சவுரவ் கங்குலி இன்ஸ்டாகிராம் நேரலையில் நேற்று பேசுகையில், செப்டம்பர் மாதம் நடக்க இருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் இதனை உறுதிப்படுத்தயுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *