Monday , September 28 2020
Breaking News

24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, நேற்றுக் காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில், 24 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் 6,603 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர். தமிழகத்தில் 3,756 பேரும், கர்நாடகாவில் 2,062 பேரும், டெல்லியில் 2,033 பேரும், தெலுங்கானாவில் 1,924 பேரும், உத்தரபிரதேசத்தில் 1,188 பேரும், ஆந்திராவில் 1,062 பேரும், மேற்கு வங்காளத்தில் 986 பேரும், அசாமில் 814 பேரும், குஜராத்தில் 783 பேரும், அரியானாவில் 691 பேரும், ராஜஸ்தானில் 659 பேரும், பீகாரில் 619 பேரும், ஒடிசாவில் 527 பேரும், மத்தியபிரதேசத்தில் 409 பேரும், புதிதாக தொற்றுக்குள்ளாகியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களில் கூறப்பட்டுள்ளது. புதிதாக பாதிப்புக்கு உள்ளானவர்களில் 75 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி, தெலுங்கானா மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 67 ஆயிரத்து 296 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, இந்தியாவில் நேற்று 487 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்து 129 ஆக அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *